உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை அதிகரிக்கப்பட்டாலும் மக்களுக்கு அதன் முழு சுமையையும் வழங்காது மானிய முறையில் எரிபொருளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
தற்போது இருக்கும் முறைப்படி மசகு எண்ணெயின் விலை மாற்றத்திற்கு அமைய எரிபொருளின் விலை மாறும் விதமான விலைச் சூத்திரமே அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கண்டியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

