நீதிமன்றத்தை அவமதித்ததாக கூறி பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக விசாரிக்கப்படுகின்ற வழக்கு எதிர்வரும் செப்டம்பர் 05ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் தனக்கு எதிராக தண்டனை வழங்க வேண்டாம் என்று நீதிமன்றத்தில் பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க மன்றாடுவதாக செய்தியாளர் கூறியுள்ளார்.
பிரதம நீதியரசர் பிரியசாத் டெப் மற்றும் நீதிபதிகளான நளின பெரேரா மற்றும் பிரசன்ன ஜயவர்தன ஆகிய உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் முன்னலையில் இது தொடர்பான குற்றப்பத்திரிகை விசாரணைக்கு அழைக்கப்பட்டது.
இதன்போது பிரதிவாதியான பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க. தானக்கு எதிரான குற்றச்சாட்டை தான் ஏற்றுக் கொள்வதில்லை என்று தனது சட்டத்தரணி ஊடாக நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

