ஞானசார தேரர் குற்றவாளி – மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு

333 0

நீதிமன்றத்தை அவமதித்தமை தொடர்பில் பொது பல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரருக்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ள நான்கு குற்றச்சாட்டுகளிலும் அவர் குற்றவாளி என மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

குறித்த மனு மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதிபதி பிரீதி பத்மன் சூரசேன மற்றும் ஷிரான் குணரத்ன முன்னிலையில் இன்று (08) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஹோமாகம நீதிமன்றத்தில் இடம்பெற்ற, ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமலாக்கப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரணையின் பின்னர் நீதிமன்ற வளாகத்தில் முறைகேடாக நடந்துகொண்ட விடயம் தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு குறித்த மனு முன்வைக்கப்பட்டிருந்தது.

அதன்படி, அவருக்கு 06 வருடங்களில் அனுபவிக்கும் படியாக 19 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

Leave a comment