போதைப் பொருள் வியாபாரத்துக்கு புகழிடம் வழங்குபவர்களுக்கு ஓமல்பே தேரர் எச்சரிக்கை

1035 33

போதைப் பொருள் வியாபாரத்துடன் தொடர்புடைய மக்கள் பிரதிநிதிகளை அந்தப் பதவிகளிலிருந்து நீக்கிவிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்ரீ லங்கா ராமஞ்ஞா பீடத்தின் தென்னிலங்கைக்கான தலைமைப் பிக்கு ஓமல்பே சோபித்த தேரர் தெரிவித்துள்ளார்.

போதைப் பொருள் வியாபாரத்திலுள்ளவர்களுக்கு அரசியல் புகழிடம் வழங்கி பாதுகாப்பும் பெற்றுக் கொடுக்கும் எம்.பிக்கள் தொடர்பில் ஊடகங்கள் நிகழ்ச்சிகளை நடாத்தும் போது ஊடகவியலாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்படுகின்றது.

குறித்த நிகழ்ச்சியின் தங்களுக்கு பாதிப்புக்கள் இருந்தால், சட்ட நடவடிக்கை மூலமே அதனை அணுக வேண்டும். மாறாக எச்சரிக்கை விடுப்பது ஆபத்தான ஒன்றாகும். ஊடகங்கள் மக்களுக்காக செயற்படும் நிறுவனங்கள் ஆகும்.

ஊடகங்களின் சுதந்திரம் பாதிக்கப்படுகின்றது என்பது, நாட்டின் ஜனநாயகத்துக்கு ஆபத்தான ஒன்றாகும் எனவும் தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a comment