ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்தினால் ஏற்பாடு செய்திருந்த இராப்போஷன நிகழ்வொன்றை விளையாட்டுத் துறை அமைச்சர் பைஸர் முஸ்தபா இடைநிறுத்தியுள்ளார்.
எதிர்வரும் 10 ஆம் திகதி இந்த இராப் போஷன வைபவம் கொழும்பு நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நடைபெற ஏற்பாடாகியிருந்தது. இதற்கான அழைப்பிதழ்களும் அச்சிடப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகின்றது.
இந்த நிகழ்வுக்கு இலங்கையின் கிரிக்கெட் வீரர்கள் உட்பட இலங்கைக்கு வருகைதந்துள்ள தென்னாபிரிக்க அணியினரும் அழைக்கப்பட விருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தேவையற்ற வீண் விரயத்தைக் கருத்தில் கொண்டு இந்த நிகழ்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுத்ததாக விளையாட்டுத் துறை அமைச்சர் பைஸர் முஸ்தபா குறிப்பிட்டுள்ளார்.

