பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு அரசாங்கம் முனையுமாக இருந்தால் கூட்டு எதிர்க் கட்சி அதற்கு எதிராக கிளர்ந்தெழும்!

195 0

மக்கள் வாழ்வாதார சிரமங்களை எதிர்கொண்டுள்ள தற்போதைய சூழ்நிலையில் பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு அரசாங்கம் முனையுமாக இருந்தால் கூட்டு எதிர்க் கட்சி அதற்கு எதிராக கிளர்ந்தெழும் என பாராளுமன்ற உறுப்பினர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.

பொரளை என்.எம்.பெரேரா நிலையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜனாநாயகம் பற்றி பேசிக்கொண்டு ஆட்சிக்கு வந்த நல்லாட்சி அரசாங்கம் தற்போது ஜனநாயகத்தின் ஆரம்ப தத்துவங்களையும் இல்லாது செய்துள்ளது.

வடக்க, கிழக்கு மக்களின் ஜனநாயத்தை உரிய முறையில் உறுதிசெய்வதற்காகவே அரசியலமைப்பின் 13 ஆம் திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது. எனினும் 13 ஆம் திருத்தத்தின் ஆரம்ப அம்சங்களையும் நல்லாட்சி அரசாங்கம் மீறியுள்ளது.

அத்துடன் எதிர்க்கட்சித் தலைவர் உடனடியாக பதவி விலக வேண்டும். ஏனெனில் அவர் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் வாழும் மாகாண சபைகளின் ஜனாநாயகம் மீறப்படுகின்ற இந்த சந்தர்ப்பத்தில் அவர் அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்கிக்கொண்டிருக்கிறார். எனவே அவர் பதிவி வலகி நாட்டில் ஜனநாயகத்தை பேணக்கூடிய எதிர்க்கட்சிக்கு அப்பதவியை வழங்க வேண்டும்.

இந் நிலயைில் மக்கள் வாழ்வாதார கஷ்டங்களை எதிர்கொண்டுள்ள தற்போதைய சூழ்நிலையில் பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு அரசாங்கம் முனையுமாக இருந்தால் கூட்டு எதிர்க்கட்சி அதற்கெதிராக கிளர்ந்தெழும் என்றார்.

Leave a comment