சம்பள அதிகரிப்பது தொடர்பில் இதுவரை இறுதி முடிவு எடுக்கப்படவில்லை – ஆனந்த குமாரசிறி

284 0

பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் சம்பள அதிகரிப்பது தொடர்பில் இதுவரை இறுதி முடிவு எடுக்கப்படவில்லை எனப் பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தெரிவித்தார்.

நீதிபதிகளின் சம்பள உயர்வுக்கு ஒப்பீட்டளவில் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டிய முறை தொடர்பில் சபாநாயகர் கட்சித்தலைவர்களுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டு முடிவெடுப்பார் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

நீதிபதிகளின் சம்பள உயர்வுக்கு ஒப்பீடாக பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் சம்பளம் அதிகரிக்கப்படவுள்ளதாக இன்றைய பத்திரிகைகள் இன்று செய்தி வெளியிட்டிருந்தது.

அதில் தற்போழுது பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் பெரும் சம்பளத்திலிருந்து நூற்றுக்கு 215 வீத அதிகரிப்பு வழங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment