பியகம சுதந்திர வர்த்தக மையத்தை அண்டிய சில பிரதேசங்களில் நாளை (31) 15 மணிநேர நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
அதன்படி நாளை (31) காலை 9 மணிமுதல் இரவு 12 மணிவரை இவ்வாறு நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.
இதற்கமைய பியகம வடக்கு, சியம்பலாவே வத்தை, அளுபோவில, தெல்கொட, அக்குருமுல்ல, கந்துபொட, உலஹிட்டிவல, வல்கம, யபரளுவ, மற்றும் மல்வான, ஆகிய கிராம சேவை பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது. இதேவேளை தொம்பே, நாமலுவ, தெகடன, நாரம்பல, கல்வலகொட, களுகொதவாவ மற்றும் இந்தொலமுல்ல ஆகிய கிராம சேவை பிரிவிற்கு உட்பட்ட பகுதியிலும் நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

