மத்திய சுற்றுச்சூழல் ஆணையம் ஒப்புதல் அளித்த இடங்களில் கழிவுப்பொருள் மேலாண்மை திட்டங்களை நடத்துமாறு அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா அறிவுறுத்தினார்.
பதுளை மாவட்டச் செயலகத்தில் இன்று (30) நடைபெற்ற பதுளை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பதுளை மாநகர சபை பிரதேசத்தின் குப்பைகளை அகற்றுவதற்காக மீகஹகிவுல பிரதேச செயலகத்தில் தெரிவு செய்யப்பட்ட நிலத்திற்கு மக்களின் எதிர்ப்பு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்த காரணத்தால் அமைச்சர் இவ்வாறு அறிவிருத்தியுள்ளார்.
நாட்டின் அபிவிருத்தியை சீர்குலைக்க சிலர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மிகவும் குறைந்த பிரிவினரே இதனை செயற்படுத்துகின்றனர். மக்கள் இவர்களிடம் சிக்கிக் கொள்கின்றனர். ஆர்ப்பாட்டங்களுக்கு பயந்தால் முதுகெலும்பற்ற அரசாங்கம் ஆகிவிடும்.
அதற்கு அவசியமில்லை. மத்திய சுற்றுச்சூழல் ஆணையம் அவர்களுக்கு ஒப்புதல் கொடுத்திருந்தால் திட்டங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். இல்லையெனில், குப்பை பிரச்சினையை ஒருநாளும் தீர்க்க முடியாது, என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

