தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம், அரசகரும மொழிகள் அமைச்சின் புதிய நிலையம் திறப்பு

334 0

தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சின் வட மாகாண நிலையம் இன்று கிளிநொச்சியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி ஏ 9 பிரதான வீதியில் 155 ஆம் கட்டை பகுதியில் குறித்த அலுவலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோகணேசன், பொது நிர்வாகம், சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார, நீதி மற்றும் சிறைச்சாலைக்ள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகொரல தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரசகரும மொழிகள் பிரதி அமைச்சர் ஷெய்யித் அலி ஸாஹீர் மௌலானா, பாராளுமன்ற பிரதிக் குழுக்களின் தவிசாளர் செல்வம் அடைக்கலநாதன், பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சரவணபவன், சிறிரதன் சாள்ஸ் நிர்மலநாதன் ஆகியோருடன் அமைச்சின் செயலாளர்கள் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த அரசாங்க அதிபர்கள், பிரதேச செயலாளர்கள் அரச உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Leave a comment