13 இலட்சம் பெறுமதியான வெளிநாட்டு நாணயத் தாள்களை எடுத்துச் செல்ல முற்பட்ட பெண் ஒருவர் உட்பட மூவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விமான நிலையத்தில் உள்ள விற்பனை நிலையம் ஒன்றில் சேவை செய்பவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக சுங்கப் பிரிவின் பிரதி பணிப்பாளர் விபுல மினுவம்பிட்டிய தெரிவித்துள்ளார்.
சந்தேக நபர்களிடம் இருந்து குவைட் தீனார், ஸ்ரோலிங் பவுன், ஜப்பான் யென், யூரோ, கட்டார் ரியால், பஹ்ரேன் தீனார் உட்பட ஒருதொகை வெளிநாட்டு நாணயத் தாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
அத்துடன் சந்தேக நபர்களிடம் இருந்து முப்பதாயிரம் ரூபாய் பெறுமதியான 30 மதுபான போத்தல்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பொருட்களை அரசுடமையாக்கியுள்ளதுடன் சந்தேக நபர்களுக்கு தண்டப் பணமும் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

