இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட, இந்திய மீனவர்களின் 173 படகுகளையும் விடுவிப்பதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றன.
பல வருடங்களுக்கு முன்னர் கைப்பற்றப்பட்ட மீன்பிடி படகுகளை, இவ்வாறு விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதென, மீன்பிடி மற்றும் நீர்வளங்கள் அபிவிருத்தி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
அதனடிப்படையில் அந்தப் படகுகள் தொடர்பில், மீன்பிடித் திணைக்களம் மற்றும் கடற்படையினரினால் வழங்கப்படும் அறிக்கையின் பிரகாரம், அடுத்தகட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படுமென, அமைச்சு தெரிவித்துள்ளது.

