இலஞ்சம் வழங்க முற்பட்ட சீன நாட்டுப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அங்குனுகொலபலஸ்ஸ மஹாவலி வலய அலுவலக முகாமையாளருக்கு குறித்த சீன பிரஜை 20,000 ரூபாய் இலஞ்சம் வழங்க முற்பட்ட போதே குறித்த அதிகாரியால் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று (29) இடம்பெற்றுள்ளது.
கற்குவாரி ஒன்றிற்கு அனுமதி பெற்றுக்கொள்வதற்காகவே குறித்த சீன பிரஜை இவ்வாறு இலஞ்சம் வழங்க முற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

