சேவையில் ஈடுபட்டுள்ள புகையிரதங்கள் மீது கற்களைக் கொண்டு தாக்குதல் நடத்தும் நபர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
கடந்த தினங்களில் இவ்வாறான நபர்கள் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் புகையிரத திணைக்களத்தின் மேலதிக பொது முகாமையாளர் விஜய சமரசிங்ஹ தெரிவித்தார்.
இவ்வாறான சம்பவமொன்று கடந்த நோன்மதி தினத்தன்று பதிவாகியுள்ளது. கொழும்பிலிருந்து மன்னார் நோக்கிப் பயணித்த புகையிரதம் மீது பேசாலை மற்றும் மன்னாருக்கு இடையில் கற்கள் வீசப்பட்டுள்ளன. இச் சம்பவத்தில் புகையிரத உதவியாளர் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

