மீகொட, கொடகம திக்ஹெத்தேகம பகுதியில் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட துப்பாக்கியுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவியல் பிரிவினருக்கு கிடைத்த தகவலை அடுத்தே குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபரிடம் இருந்து உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட துப்பாக்கி ஒன்றும் அதற்காக பயன்படுத்தப்பட்ட ரி 56 ரக துப்பாக்கியின் ரவைகள் 7 உம், வாள் ஒன்றும் மற்றும் கேரள கஞ்சா 350 கிராமும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
மீகொட, ஹெட்டியாவத்த பகுதியை சேர்ந்த 38 வயதுடைய இலேபெருமகே தொன் டக்லஸ் பிரியனந்த பெரேரா எனும் டீலா என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரை இன்று (25) ஹோமாகம நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதுடன் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவியல் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

