சபாநாயகர் தலைமையில் 12 பேர் அடங்கிய குழு எகிப்து பயணம்

442 0

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில், 12 பேரடங்கிய தூதுக்குழுவொன்று, எகிப்துக்கு பயணமாகியுள்ளது.

எகிப்து பாராளுமன்றத்தின் சபாநாயகர் விடுத்திருந்த விசேடமான அழைப்பையேற்றே அக்குழுவினர், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தினூடாக இன்று (25) புறப்பட்டுச் சென்றுள்ளனர்.

இரு நாடுகளுக்கும் இடையிலான பாராளுமன்ற தொடர்புகளை வலுப்படுத்தல் உள்ளிட்ட பல்வேறு மட்டங்களில், அக்குழுவினர் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடு​வரென தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தூதுக்குழுவில், அமைச்சர்களான கயந்த கருணாதிலக்க, ஜே.சி. அலவத்துவல, இராஜாங்க அமைச்சர்களான ரஞ்சித் அலுவிஹார, ஏ.எச்.எம். பௌசி, பிரதியமைச்சர் எட்வட் குணசேகர, நாடாளுமன்ற உறுப்பினர்களான மஹிந்த யாப்பா அபேவர்தன, அனுர சிட்னி ஜயரத்ன, எம்.ஐ.எம். மன்சூர், ஹெக்டர் ஹப்புஹாமி, அ.அரவிந்தகுமார் மற்றும் நாடாளுமன்ற பிரதிச் செயலாளர் நாயகம் நீல் இத்தவல ஆகியோர் அடங்குகின்றனர்.

Leave a comment