தங்கம் கடத்திய இருவர் கைது

224 0

சட்டவிரோதமான முறையில்  தங்கம் கடத்திய இருவரை இலங்கை  கடற்படையினர் கைது செய்துள்ளனர்.கற்பிட்டி கிம்புல்பொக்க கடற்பரப்பில் வைத்து குறித்த இருவரும் 5.7 கீலோ கிரேம் தங்கத்துடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட தங்கத்தின் பெறுமதி 20 மில்லியன் என கடற்படைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர்கள் பயணித்த படகினையும் கைப்பற்றியுள்ள  கடற்படையினர் குறித்த இருவரிடமும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment