வாகன விபத்தில் இரு மாணவர்கள் காயம்

228 0

கினிகத்தேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் கண்டி பிரதான வீதியில் அம்பகமுவ பகுதியில் வேன் ஒன்றும் தனியார் பஸ் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இரு பாடசாலை மாணவர்கள் படுகாயமைந்த நிலையில் நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் இன்று  மாலை 3.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

கினிகத்தேனை சிங்கள மத்திய கல்லூரியிலிருந்து இருமாணவர்களையும், ஆசிரியையும் ஏற்றிக் கொண்டு அம்பகமுவ பகுதிக்கு சென்ற வேனும் நாவலபிட்டியிலிருந்து கினிகத்தேனை நோக்கி பயணித் தனியார் பஸ் ஒன்றுமே இவ்வாறு மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

இந்த விபத்தில் மாணவர்கள் மாத்திரம் காயமடைந்துள்ளதுடன் ஆசிரியைக்கோ, சாரதிக்கோ பெரிய அளவில் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை.

இந்த விபத்து காரணமாக சில மணித்தியாலங்கள் போக்குவரத்து ஸ்தம்பிதம் அடைந்து வாகன நெரிசலும் ஏற்பட்டன. அதனை தொடர்ந்து வேனையும், பஸ்ஸையும் பொலிஸார் அகற்றியதன் பின் போக்குவரத்து மீண்டும் வழமைக்கு திரும்பியது.

வேனில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இவ் விபத்து ஏற்ப்பட்டுள்ளதாக பொலிஸார் மேற் கொண்ட ஆரம்பகட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளன.

இவ்விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை கினிகத்தேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment