முஸ்லிம் ஊடகவியலாளர்கள் தேசத்துக்கு ஆற்றிய பங்களிப்பு பாராட்டுக்குரியது- கபீர்

293 0

இந்த நாட்டு முஸ்லிம் ஊடகவியலாளர்கள் கடந்த காலங்களில் தேசத்துக்குப் பங்காற்றியது போலவே சமகாலத்திலும் பல்வேறு தடைகளுக்கு மத்தியில் தமது கடமைகளை நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றனர் என பெருந்தெருக்கள் அமைச்சர் கபீர் ஹாஷிம் தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 22 ஆவது வருடாந்த அங்கத்தவர் கூட்டம் இன்று (21) அரச தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே இவ்வாறு கூறினார்.

யுத்தத்தினால் முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டது போலவே முஸ்லிம் ஊடகவியலாளர்களும் பாதிக்கப்பட்டனர். கடந்த 2008 ஆம் ஆண்டு ஒக்டோபர் 06 ஆம் திகதி ரஸ்மி முகம்மத் எனும் ஊடகவியலாளர் அனுராதபுரத்தில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தார்.

அத்துடன், 2008 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 28 ஆம் திகதி தினகரன் பத்திரிகையின் ஆசிரியர் மற்றும் ஊடகவியலாளர் எம்.ஐ. ரஹ்மதுல்லாஹ், சுதந்திர ஊடகவியலாளர் ஜவ்பர் கான் போன்ற எமது ஊடகவியலாளர் பல்வேறு தாக்குதல்களுக்கு உட்பட்டனர். இது எனது நினைவுக்கு வந்த பெயர்கள் சிலது மாத்திரமே. இதுவல்லாத, பலர் இருப்பார்கள் என நினைக்கின்றேன். இத்தனை  பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்த போதிலும் எமது ஊடகவியலாளர்கள் தமது பொறுப்பைக் கைவிடவில்லை. இதனை நாம் பாராட்டுவோம்.

இன்றும் அவ்வாறே முஸ்லிம் ஊடகவியலாளர்கள் நிறைவேற்றிக் கொண்டுள்ளனர். இன்று எமது ஊடகவியலாளர்கள் முன்னால் உள்ள முக்கிய பொறுப்பொன்று உள்ளது. அதுதான், தேசிய நல்லிணக்கம் ஆகும். இந்த விடயத்தில் ஊடகங்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் பாரிய பொறுப்பு உள்ளது எனவும் அமைச்சர் மேலும் கூறினார்.

Leave a comment