அம்பன்பொல பிரதேசத்தில் ஒருவர் கொலை

324 0

அம்பன்பொல, வலன்வெவ பிரதேசத்தில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

அம்பன்பொல பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் தலையில் காயங்களுடன் குறித்த சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அம்பன்பொல, வலன்வெவ பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் உயிரிழந்தவரின் தாயுடைய கள்ளக் காதலன் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட உள்ளநிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Leave a comment