2020 இல் மைத்திரிபால சிறிசேன பொது வேட்பாளர் – மஹிந்த

292 0

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி என்பவற்றின் செயலாளர்கள் இருவரும் 2020 இல் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் நேரெதிர் முரண்பாடான கருத்துக்களை இன்று ஊடகங்களிடம் வெளியிட்டனர்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி சார்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனதான் வேட்பாளராக வருவார் எனவும், அதுவும் பொது வேட்பாளராகவே அவர் போட்டியிடுவார் எனவும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளரும் அமைச்சருமாகிய மஹிந்த அமரவீர இன்று (16) ஊடகங்களிடம் குறிப்பிட்டார்.

நாட்டிலுள்ள தற்போதைய அரசியல் சூழ்நிலையில் தனித்து போட்டியிட்டு எவராலும் வெற்றி பெற முடியாது என்பது யாவரும் அறிந்த விடயம். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி பொது வேட்பாளராக மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியையே நிறுத்தும் எனவும் அமைச்சர் மஹிந்த அமரவீர கூறினார்.

இதேவேளை, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் ரோஹண லக்ஷமன் பியதாச ஜனாதிபதி வேட்பாளர் குறித்து கருத்துத் தெரிவிக்கையில்,

பொது வேட்பாளர் குறித்து ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி நம்பிக்கையிழந்துள்ளதாகவும், தனியான ஒரு வேட்பாளரே 2020 இல் கட்சி சார்பில் போட்டியிடுவார் எனவும், வேட்பாளர் யார் என்பது குறித்து இதுவரையில் தீர்மானம் இல்லையெனவும் குறிப்பிட்டார்.

2020 இல் ஸ்ரீ சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என ஊடகங்கள் வினவியதற்கு பதிலளிக்கையிலேயே இரு செயலாளர்களும் முரண்பட்ட கருத்துக்களைத் தெரிவித்தனர்.

Leave a comment