சிறுமிக்கு மதுபானம் புகட்டியவருக்கு தயவு தாட்சண்யம் இன்றி நடவடிக்கை- பொலிஸ்

7 0

ஒருவயது பிள்ளைக்கு மதுபானம் புகட்டிய சம்பவம் தொடர்பில் தயவு தாட்சண்யம் இன்றி நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் மா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர தெரிவித்தார்.

வீட்டில் நடைபெற்ற நிகழ்வொன்றின் போது மது அருந்தி விட்டு தன் கையில் வைத்திருந்த சிறுமிக்கும் மது புகட்டும் காட்சியொன்று ஊடகங்களில் வெளியாகியிருந்தது. இது தொடர்பில் பொலிஸார் உடனடியாக விசாரணையை ஆரம்பித்துள்ளதாகவும், இந்த சம்பவம் இடம்பெற்ற இடம், சம்பந்தப்பட்ட நபர் என்பன தொடர்பில் பொலிஸார் அடையாளம் கண்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டார்.

மீகலேவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 313 கனங்கமுவ எனும் பிரதேசத்திலுள்ள வீடொன்றில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்துடன் தொடர்புபட்ட சிறுமி தற்பொழுது வைத்திய பரிசோதனைக்காக அனுராதபுர நீதிமன்ற வைத்திய அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும்,  குறித்த சிறுமி ஒரு வயதை உடைய ஒருவர் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் கூறினார்.

Related Post

தாயகம் திரும்ப முற்பட்ட சகோதரர்கள் இருவர் இந்திய கடலோக கடற்படையினரால் கைது

Posted by - January 16, 2019 0
தமிழகத்தில் இருந்து சட்ட விரோதமாக இலங்கைக்கு தப்ப முயற்சித்த இருவரை இந்திய கடலோக கடற் படையினர் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இந்திய…

இனப்பிரச்சினைக்கான தீர்வினைக் காண்பதற்கு மும்மொழிக் கொள்கையை அமுல்படுத்துவது அவசியம்- மனோ(காணொளி)

Posted by - August 15, 2017 0
இனப்பிரச்சினைக்கான தீர்வினைக் காண்பதற்கு மும்மொழிக் கொள்கையை அமுல்படுத்துவது அவசியம் என தேசிய கலந்துரையாடல் மற்றும் அரச கரும மாழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற…

கொரியப் பெண்ணின் பேர்ஸைத் திருடிய நபர் சிக்கினார்

Posted by - March 14, 2017 0
கொரியப் பெண்ணின் பேர்ஸைத் திருடிய நபரைக் கண்டு பிடித்து பேர்ஸைக் கைப்பற்றியதோடு அதிலிருந்த பணமும் இன்னபிற பொருட்களையும் மீட்டு உரியவரிடம் பத்திரமாக ஒப்படைத்ததாக ஏறாவூர் பொலிஸ் பொறுப்பதிகாரி…

வரவு செலவுத் திட்டத்தில் அபாயமான நிலை – விஜேவர்தன

Posted by - November 13, 2016 0
இந்த வரவு செலவுத் திட்டத்தில் அபாயமான நிலை ஒன்று காணப்படுகின்றது. மத்திய வங்கி நிதிச் சபையில் நிதி அமைச்சர் தலையீடு செய்ய ஆரம்பித்துள்ளார். என மத்திய வங்கியின்…

பண்டிகை காலத்தில் விசேட விலைக்கழிவில் பொருட்கள்

Posted by - November 7, 2017 0
எதிர்வரும் பண்டிகை காலத்தில் பொருட்களின் விலைகளை குறைக்க விசேட வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் மகிந்த அமரவீர இதனைத் தெரிவித்துள்ளார். தங்கல்லையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து…

Leave a comment

Your email address will not be published.