ஆடைத்தொழிற்சாலை ஒன்றின் பணியாளர்கள் ஏற்றிச்சென்ற பஸ் ஒன்று, ஹபரண பிரதேசத்தில் விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 20 பெண் ஊழியர்கள் காயமடைந்துள்ளனர்.
பொத்தலவிலிருந்து கொக்கலை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த பஸ் வீதியை விட்டு, விலகி தென்னைமரத்தில் மோதி விபத்துக்குள்ளானதாக ஹபரண பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதோடு, காயமடைந்த அனைவரும் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதிக வேகமே விபத்துக்கான காரணமெனத் தெரிவிக்கும் பொலிஸார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

