வடக்கு கிழக்கு மக்களின் வீடுகள் இன்மை பிரச்சினை உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க அரசாங்கம் தற்போதுவரை தோல்வியடைந்திருப்பதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் இதற்காக சரியான தலையீடு செய்யாமை வருத்தமளிப்பதாக அவர் குறிப்பிட்டார்.
தம்புள்ளை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் மனோ கணேசன் இதனை தெரிவித்தார்.

