அரச காணிகளில் வசிப்போருக்கு நிரந்தர உறுதி – கயந்த

206 0

காணி உறுதிப்பத்திரங்களை வழங்குவதற்காக அரசாங்கம் பல தீர்மானங்களை மேற்கொண்டுள்ளதாக காணி மற்றும் பாராளுமன்ற மறு மறுசீரமைப்பு அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.

பத்து இலட்சம் காணி உறுதிகளை வழங்குவது தொடர்பான தேசிய திட்டம் பற்றி மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் கூட்டம், இரத்தினபுரி மெல்பதுளை நகரில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

காணி உறுதிப்பத்திரங்களை வழங்குவது தொடர்பான காலாவதியான சட்ட திட்டங்களையும் நிபந்தனைகளையும் தளர்த்த வேண்டியுள்ளது. காணி சீர்திருத்த ஆணைக்குழுவுக்கு சொந்தமான காணிகளிலும், அரச காணிகளிலும் வசிப்போருக்கு நிரந்தர உறுதிப்பத்திரம் வழங்கப்படும்.” எனக் குறிப்பிட்டார்.

மேலும், “நாட்டிலுள்ள பல அரச நிறுவனங்களும், மத வழிபாட்டுத் தலங்களும், பாடசாலைகளும் காணி உறுதிப்பத்திரங்களை கொண்டிருக்கவில்லை. காணிகளை முறையாக அளந்து, உறுதிப்பத்திரங்களை வழங்கும் நோக்கில் பாரியதொரு திட்டம் அமுலாக்கப்படும்” எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Leave a comment