முஜிபுர் ரஹ்மான் எம்.பியின் பெயரில் மோசடி, ஒருவர் கைது

0 0

கொழும்பில் சொகுசு வீடு பெற்றுத் தருவதாக தெரிவித்து கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மானின் பெயரை பயன்படுத்தி கோடிக் கணக்கில் பணம் வசூலித்ததாக கூறப்படும் நபர் ஒருவர் வாழைத்தோட்ட பொலிஸாரினால் இன்று (11) கைது செய்யப்பட்டுள்ளார்.

முஜிபுர் ரஹ்மான் எம்.பி. வழங்கிய முறைப்பாட்டையடுத்தே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபர் புதுக்கடை பண்டாரநாயக்க மாவத்தையில் வசிக்கும் ஒருவர் எனவும் குறிப்பிடப்படுகின்றது.

இவர் வாழைத்தோட்ட பிரதேசத்திலுள்ளவர்களிடம் மாத்திரம் சுமார் 50 லட்சத்துக்கும் அதிகமான பணத்தை மோசடி செய்துள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related Post

யுத்தம் முடிந்தபோதிலும் சமாதானம் மலரவில்லை- ராஜித

Posted by - June 18, 2018 0
நாட்டில் யுத்தம் முடிவிற்கு கொண்டுவரப்பட்டபோதும் நிரந்தர சமாதானம் இன்னும் மலரவில்லை என சுகாதார போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் வைத்திய கலாநிதி ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.…

தம்மாலோக தேரரை அச்சுறுத்தியவர் கைது

Posted by - May 3, 2017 0
கொழும்பு நீதவான் நீதிமன்ற வளாகத்தில் வைத்து உடுவே தம்மாலோக தேரரை, அச்சுறுத்தியதாக கூறப்படும் ஒருவர் வாழைத்தோட்டப் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பணியாற்றவுள்ள நாய்கள்

Posted by - February 15, 2017 0
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சேவையில் ஈடுபடுத்துவதற்காக 20 நாய்களை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

மாதாந்தம் 30000 அமெரிக்க டொலர்களை செலுத்தும் இலங்கை

Posted by - August 21, 2016 0
இலங்கையின் சமாதான முன்னெடுப்புகளுக்காகவும் பொருளாதார வளர்ச்சியை கருத்திற்கொண்டும், சர்வதேச வர்த்தகத்துறை அமைச்சர் மலிக் சமரவிக்கிரம, அமெரிக்காவின் பொதுமக்கள் உறவு நிறுவனம் ஒன்றுடன் உடன்பாட்டை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டொனால்ட் டிரம்ப்பின் பதவியேற்ப்புக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம்

Posted by - January 20, 2017 0
அமெரிக்காவின் 45 ஆவது ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் இன்று பதவியேற்கவுள்ளார். டொனால்ட் டிரம்ப்பின் பதவியேற்ப்புக்கு எதிராக இன்று கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு முன்னாள் ஆர்ப்பாட்டம் ஒன்று…

Leave a comment

Your email address will not be published.