ஞானசார தேரரின் நீதிமன்ற அவமதிப்பு மனு இன்று விசாரணை

530 0

கலகொட அத்தேஞானசார தேரருக்கு எதிராக நீதிமன்றத்தை அவமதித்ததாக கூறப்படும் முறைப்பாட்டு மனு  தொடர்பில் எழுத்து  மூல ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு மேற்முறையீட்டு நீதிமன்றம், மனு தாரருக்கும் பிரதி வாதிக்கும் இன்று (11) உத்தரவு பிறப்பித்துள்ளது.

சம்பந்தப்பட்ட ஆவணங்களை எதிர்வரும் 13 ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதிபதி பிரீதி பத்மன் சூரசேன மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் குழுவின் முன்னிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே நீதிபதி இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.

ஹோமாகம மஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் போன வழக்கு விசாரணை நிறைவடைந்த வேளை, நீதிமன்ற கட்டிடத்துக்குள் இருந்து கொண்டு சப்தத்தை உயர்த்தி பேசி, குழப்பம் விளைவிக்கும் விதத்தில் பொதுபல சேனாவின் செயலாளர் ஞானசார தேரர் செயற்பட்டார்.

தேரரது நடவடிக்கைகள் தொடர்பில் விசாரணை செய்து நீதிமன்றத்துக்கு அபகீர்த்தி ஏற்பட்டுள்ளதா ? என்பது தொடர்பில், கண்டறிந்து நடவடிக்கை எடுக்குமாறு அரசியலமைப்பு சட்டத்தின் மூலம் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் பிரகாரம் ஹோமாகம மஜிஸ்ட்ரேட் நீதிபதியினால் இந்த மேன்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment