அதிகரிக்கிறது எரிபொருளின் விலை

331 0

எரிபொருள் விலை சூத்திரத்தினை மாதமொருமுறை அமுலாக்குவதற்கு ஜனாதிபதி மற்றும் நிதியமைச்சருக்கிடையில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பாக நிதியமைச்சர் மங்களசமரவீரவுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்குமிடையில் இன்று மாலை 4.00 மணியளவில் ஜனாதிபதி செயலகத்தில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது மேற்கண்ட தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி இலங்கை எரிபொருள் கூட்டுத் தாபனத்தில் பெற்றோல் 92 ஒக்டேய்ன் லீற்றர் ஒன்றின் விலை 8 ரூபாவினாலும் 95 ஒக்டேய்ன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 7 ரூபாவினாலும் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 9 ரூபாவினாலும் சுப்பர் டீசலின் விலை 10 ரூபாவினாலும் அதிகரிக்கப்படவுள்ளன.

இதற்கிணங்க ஒக்டேய்ன் 92 வகை பெற்றோலின் புதிய விலை 145 ரூபாவாகவும், 95 ஒக்டேய்ன் வகை பெற்றோலின் புதிய விலை 155 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் டீசலின் புதிய விலை 118 ரூபாவாகவும், சூப்பர் டீசலின் புதிய விலை 129 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் இந்த விலை அதிகரிப்பானது இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் என்றும் அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டார்

Leave a comment