தபால் மா அதிபர் ரோஹண அபேரத்னவின் இடமாற்றத்துடன் தபால் திணைக்களத்தின் நடவடிக்கைகள் மேலும் நெருக்கடி நிலைக்கு உள்ளாகலாம் என தபால் தொழில் சங்கங்கள் தெரிவித்துள்ளன.
அரசாங்கம் வாக்களித்துள்ள தமது கோரிக்கைகளுக்கு தீர்வைப் பெற்றுத் தருவதற்கு தபால் மா அதிபரின் இடமாற்றம் தாமதத்தை ஏற்படுத்தும் எனவும் கூட்டு தபால் தொழிற்சங்கங்கள் முன்னணியின் ஏற்பாட்டாளர் சிந்தக பண்டார குறிப்பிட்டுள்ளார்.
தாம் முன்னெடுத்து வந்த 12 வருட கால போராட்டம் பற்றிய முழுமையான தெளிவுள்ளவர் தான் ரோஹண அபேரத்ன. இவருக்குத் தான் இந்தப் பிரச்சினையின் ஆழ அகலம் நன்கு தெரியும். இவரால் தான் பிரச்சினைக்கு தீர்வு தர முடியும். இந்நிலையில் அவர் ஜனாதிபதி செயலகத்துக்கு அவசரமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தமது பிரச்சினைக்குத் தீர்வு வழங்குவதில் இழுபறி நிலைமை உருவாகினால் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கைக்குச் செல்ல வேண்டி ஏற்படும் எனவும் சிந்தக பண்டார எச்சரிக்கை விடுத்துள்ளார்.

