அமைச்சுப் பதவி பறிபோனதற்காக தான் கவலைப்படுவதில்லையெனவும் தனது அரசியல் பயணத்தை தடையின்றி முன்னெடுத்துச் செல்லப் போவதாகவும் இராஜினாமா செய்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மஹேஷ்வரன் தெரிவித்துள்ளார்.
உங்களது கணவரைக் கொலை செய்தது, எல்.ரி.ரி.ஈ. அமைப்பு என தகவல்கள் உள்ள நிலையில் அதுபோன்ற ஒரு அமைப்பை மீண்டும் கொண்டு வர வேண்டும் என கூறுவது எந்த வகையில் நியாயமானது என இன்றைய பத்திரிகையொன்று வினவியதற்கே இவ்வாறு பதிலளித்துள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது,
தான் அன்று ஆற்றிய உரை தொடர்பில் விளக்கமளிப்பது பயனற்றது. இது தொடர்பில் பேசி மேலும் பிரச்சினையை ஏற்படுத்த வேண்டாம்.
தனக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் பதிலளிக்க கடவுளால் மாத்திரமே முடியும், கடவுள் இருக்கிறார் எனவும் முன்னாள் அமைச்சர் விஜயகலா மேலும் குறிப்பிட்டுள்ளார்.

