கொழும்பில் இன்று காலை முதல் 9 மணி நேர நீர்வெட்டு

357 0

கொழும்பின் சில பிரதேசங்களுக்கு இன்று  (07) காலை 9.00 மணி முதல் மாலை 6.00 மணி வரையில் 9 மணி நேர நீர் வெட்டு அமுலில் இருக்கும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

அவசர மற்றும் அத்தியவசிய பராமரிப்பு நடவடிக்கை காரணமாக இவ்வாறு நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, கொழும்பு கோட்டை மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்கள் மற்றும்  நாரஹேன்பிட்டி, ஹெவலொக் டவுன், கிருளப்பன ஆகிய பிரதேசங்களில் நீர் வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

Leave a comment