பாடசாலைகளுக்கு இடையிலான தேசியமட்ட பளுதூக்கல் தொடரில் ஆண்கள் பிரிவில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அணி இரண்டு தங்கப்பதக்கங்கள், இரண்டு வெள்ளிப்பதங்கள், மூன்று வெண்கலப்பதக்கங்கள் என ஏழு பதக்கங்களைக் கைப்பற்றியது.
திருகோணமலை அக்கிரபோதி தேசிய கல்லூரியில் இந்தப் போட்டிகள் நடைபெற்றன. 20 வயதுக்கு உட்பட்ட 62 கிலோ எடைப் பிரிவில் எஸ்.சிந்துஜன் சினெச் முறையில் 90 கிலோ கிளின் அன்ட் ஜக் முறையில் 115 கிலோவுமாக ஒட்டுமொத்தமாக 205 கிலோ பளுவைத் தூக்கி தங்கப் பதக்கத்தையும், 105 கிலோவிற்கு மேற்பட்ட பிரிவில் ரி.கிரிசான் சினெச் முறையில் 90 கிலோ கிளின் அன் ஜக் முறையில் 95 கிலோவுமாக ஒட்டுமொத்த 185 கிலோ பளுவைத் தூக்கி தங்கப் பதக்கத்தையும் 105 கிலோ எடைப் பிரிவில் சினெச் முறையில் 78 கிலோ கிளின் அன்ட் ஜக் முறையில் 91 கிலோவுமாக ஒட்டுமொத்தமாக 169 கிலோ பளுவை தூக்கி வெண்கலப் பதக்கத்தையும் கைப்பற்றினர்.
17 வயதுக்கு உட்பட்ட 77 கிலோ எடைப் பிரிவில் எம்.திசாந் சினெச் முறையில் 70 கிலோ கிளின் அன்ட் ஜக் முறையில் 80 கிலோவுமாக ஒட்டுமொத்தமாக 150 கிலோ பளுவை தூக்கி வெள்ளிப் பதக்கத்தையும் 94 கிலோ எடைப் பிரிவில் கிசாளன் சினெச் முறையில் 60 கிலோ கிளின் அன் ஜக் முறையில் 75 கிலோவுமாக ஒட்டுமொத்தமாக 135 பளுவை தூக்கி வெள்ளிப் பதக்கத்தையும் கைப்பற்றினர்.

