சரண குணவர்தனவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துக- நீதிபதி உத்தரவு

251 0

முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு கோட்டை மஜிஸ்ட்ரேட் லங்கா ஜயரத்ன இன்று (25) உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தேசிய அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவராக இருக்கும் போது 80 லட்சத்து 95 ஆயிரம் ரூபா பெறுமதியான சுகபோக வாகனமொன்றை முறையற்ற முறையில் கொள்வனவு செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தன, நீதிமன்றத்தில் எந்தவித அறிவிப்பும் இன்றி சம்பந்தப்பட்ட வழக்கில் ஆஜராகாமைக்காகவே நீதிமன்றம் இவ்வாறு உத்தரவைப்  பிறப்பித்துள்ளது.

சரண குணவர்தன சம்பந்தப்பட்ட வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். பின்னர் பிணையில் அவரை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. இந்நிலையிலேயே குறித்த வழக்கு விசாரணைக்கு அவர் ஆஜராகாமல் இருந்துள்ளார்.

கடந்த 2015 ஆம் ஆண்டு இடம்பெற்றதாக கூறப்படும் இந்த ஊழல் சம்பவம் தொடர்பில், கொழும்பு குற்றவியல் பிரிவு சரண குணவர்தனவை கடந்த செப்டம்பர் 4 ஆம் திகதி கைது செய்திருந்ததாக குறிப்பிடப்படுகின்றது.

Leave a comment