பாட்டி வயது வெளிநாட்டு பெண்ணை மணந்த இந்திய இளைஞர்!

20089 11
அரியானாவை சேர்ந்தவர் பிரவீன்( வயது 27) , அமெரிக்காவை சேர்ந்த கரென் லிலியன் எப்னர் ( வயது 65). இவர்கள் இருவரும் கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு பேஸ்புக்கில் நட்பாகியுள்ளனர், வீடியோ சாட்டில் தொடங்கிய உரையாடல் காதலில் முடிந்துள்ளது. இதனையடுத்து இருவருக்கும் கடந்த 21ம் தேதி சண்டிகரில் திருமணம் நடைபெற்றது, உறவினர்கள் சம்மதத்துடன் பிரவீனை மணந்து கொண்டுள்ளார் கரென்.

தற்போது வாடகை அடுக்குமாடி குடியிருப்பில்  புதுமண தம்பதியினர் குடியேறியுள்ளனராம். அடுத்த மாதம் 18ம் தேதி கரென் அமெரிக்காவுக்கு திரும்ப வேண்டும் என்பதால், பிரவீன் சுற்றுலா விசாவுக்கு விண்ணப்பித்துள்ளார். அது கிடைக்காதபட்சத்தில் நிரந்தரமாக இந்தியாவிலேயே தங்க கரென் முடிவு எடுத்துள்ளாராம்.

Leave a comment