ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அரசாங்கத்திலிருந்து விலகிய 16 பேர் கொண்ட குழு தன்னுடன் கலந்துரையாடலில் ஈடுபடப் போவதாக ஊடகங்களில் பிரச்சாரம் செய்த போதிலும், அவ்வாறான எந்தவொரு அழைப்பும் தனக்கு இதுவரையில் விடுக்கப்படவில்லையென முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாப ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.
விசேட அறிவித்தல் ஒன்றின் மூலம் அவர் இதனைக் கூறியுள்ளார்.
இன்று (12) அக்குழுவுடன் எந்தவித உத்தியோகபுர்வ சந்திப்பும் இடம்பெற மாட்டாது எனவும் அந்த அறிக்கையில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபாலவின் வீட்டில் இன்று (12) கோட்டாப ராஜபக்ஷவுடன் சந்திப்பு இடம்பெறவுள்ளதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பீ. திஸாநாயக்க ஊடகங்களிடம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

