புகையிரத தொழில்நுட்ப உத்தியோகத்தர்களின் தொழிற்சங்கம் வேலைநிறுத்த யோசனையை கைவிட்டுள்ளது.
தமது கோரிக்கைகளை நிறைவேற்றப்போவதாக அதிகாரிகள் உறுதி அளித்ததைத் தொடர்ந்து வேலைநிறுத்தத்தை கைவிடுவது என தீரமானித்ததாக தொழிற் சங்க கூட்டுக் கமிட்டியின் செயலாளர் கமல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இந்தத் தொழிற்சங்கம் இன்று நள்ளிரவு தொடக்கம் காலவரையறையற்ற வேலைநிறுத்தத்தை ஆரம்பிக்க திட்டமிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

