ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன எந்தத் தேர்தலிலும் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்காது என அக்கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
பத்தரமுல்லையில் நேற்று(11) இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.
எதிர்வரும் எந்தத் தேர்தலிலாவது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசியல் கூட்டணியொன்றை இணைத்துக்கொண்டு தேர்தலில் களமிறங்கினாலும் நாம் ஆதரவு வழங்க மாட்டோம். பொதுஜன பெரமுன வேறாக போட்டியிடும் எனவும் அவர் கூறினார்.
மக்களின் தீர்ப்புக்கு அஞ்சியே இன்று நல்லாட்சி அரசாங்கம் தேர்தல்களை பிற்போடுவதில் அக்கறை காட்டுகின்றது. மக்களின் ஜனநாயக பண்புகளில் ஒன்றான தேர்தலை இன்று மக்கள் போராடி பெற வேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளதாகவும் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் மேலும் சுட்டிக்காட்டினார்.

