மஸ்தானுக்கு மீள் குடியேற்றம், இந்து விவகாரம் – அங்கஜனுக்கு விவசாய பிரதியமைச்சு

385 0

புதிய இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் பதவியேற்கும் நிகழ்வு இன்று காலை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

அதன்படி இராஜாங்க அமைச்சர்கள் இருவர், பிரதி அமைச்சர்கள் ஐவருக்கு இன்று நியமனங்கள் வழங்கப்பட்டன.

அதனடிப்படையில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானுக்கு மீள் குடியேற்றம், புனர்வாழ்வு, வடமாகாண அபிவிருத்தி, இந்து விவகார பிரதி அமைச்சர் பதவியும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனுக்கு விவசாய பிரதியமைச்சும் வழங்கப்பட்டுள்ளன.

பாராளுமன்ற உறுப்பினர் மஸ்தான் முதன் முறையாக கடந்த பொதுத்தேர்தலில் போட்டியிட்டதுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சார்பாக வெற்றியீட்டிய ஒரேயொரு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினருமாவார்.

அத்துடன் அங்கஜன் இராமநாதன் வடமாகாணசபை உறுப்பினராக இருந்துள்ளதுடன் சுதந்திரக்கட்சியின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பிராக நியமிக்கப்பட்டு தற்பொழுது பிரதியமைச்சு பதவி வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a comment