மைத்திரி குணரத்னவுக்கு எதிராக வழக்குத்தாக்கல்!

269 0

ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் மைத்திரி குணரத்னவுக்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியினர் 500 மில்லியன் ரூபா நஷ்டஈடு கோரி வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.

மக்கள் விடுதலை முன்னணியின் கோப் குழு உறுப்பினர் நளிந்த ஜெயதிஸ்ஸ அலோசியஸின் நிறுவனம் ஒன்றிலிருந்து பணம் பெற்றுக்கொண்டார் என்ற குற்றச்சாட்டை ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் மைத்திரி குணரத்ன முன்வைத்தமையினாலேயே அவருக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஜே.வி.பி உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவிக்கையில்,

நான் கோப் குழுவில் பங்குபற்றி மத்திய வங்கி ஊழலுக்கு எதிராக குரல்கொடுத்து வந்துள்ளேன். பல்வேறு சந்தர்ப்பங்களில் பாராளுமன்றத்தில் பிணைமுறி ஊழல் குறித்து கேள்வி எழுப்பியுள்ளேன். இந்நிலையில் என் மீது எந்தவித ஆதாரமும் இல்லாது இவ்வாறு ஊழல் குற்றம் சுமத்துவது ஒருபோதும் ஏற்றுகொள்ள முடியாத ஒன்றாகும்.

என்மீது பொய்யான குற்றம் சுமத்திய மைத்திரி குணரத்தனவிற்கு எதிராக நான் 500 மில்லியன் ரூபாய் நஷ்டஈடு கோரி வழக்கு தாக்கல் செய்துள்ளதுடன் அது குறித்த அறிவித்தலை அவருக்கு அனுப்பி வைத்துள்ளேன். அடுத்த மாதம் இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளது என்றார்.

Leave a comment