வரியை நீக்காது போனால் 18 முதல் விசேட மருத்துவ நிபுணர் சேவை இல்லை- மருத்துவ நிபுணர்கள்

277 0

அரசாங்கத்தினால் அறிமுகம் செய்துள்ள புதிய வரி சேகரிப்பு முறைமையின் கீழ் தனியார் வைத்தியசாலை வைத்திய சேவையின் மீது சுமத்தப்பட்டுள்ள வரி தொடர்பில் விசேட வைத்திய நிபுணர்களின் சங்கத்துக்கும் நிதி அமைச்சர் மங்கள சமரவீரவுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் இன்று (11) நிதி அமைச்சில் இடம்பெறுகின்றது.

இன்று நடைபெறும் பேச்சுவார்த்தையில் தனியார் வைத்திய சேவை தொடர்பில் சுமத்தப்பட்டுள்ள தேவையற்ற வரியை நீக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிடின் இம்மாதம் 18 ஆம் திகதி முதல் சகல விசேட மருத்துவ நிபுணர்களும் தமது தனியார் வைத்திய சேவையிலிருந்து நீங்கிக் கொள்வதாக விசேட வைத்தியர்கள் சங்க தலைவர் டாக்டர் சுனில் விஜயசிங்க தெரிவித்துள்ளார்.

Leave a comment