நாட்டின் அரசியல் மாற்றத்துக்கு ஏற்ப, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்திலும் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும் எனவும் இதுவே மக்களின் எதிர்பார்ப்பு எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
கண்டி தலதா மாளிகைக்குச் சென்று வழிபட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு நேற்று கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.
ஐ.தே.க.யை முன்னேற்ற வேண்டுமாக இருந்தால் கட்சியின் தலைமைத்துவம் மாற்றம் காண வேண்டும் என்பது கட்டாயமான ஒன்று எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

