மலையகத்தில் பெய்து வரும் அடைமழை காரணமாக மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவு ஒன்று இன்று (10) காலை திறந்து விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக கெனியன், லக்ஷ்பான, விமலசுரேந்திர, மவுஸ்ஸாக்கலை, காசல்ரீ ஆகிய நீர்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

