ஜனாதிபதியுடன் இருக்கும் கோபத்தை தன்னில் வெளிப்படுத்த வேண்டாம் என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் அமைச்சருமான டிலான் பெரேரா தெரிவித்தார்.
2020 ஆம் ஆண்டு ஜனாதிபதி வேட்பாளராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைக் குறிப்பிட்டமையே அவர் என்மீது கோபம் கொள்வதற்கு காரணமாகும். அவர் தேசியப் பட்டியல் உறுப்பினராக இருந்து கொண்டு இவ்வாறு விமர்சிப்பது பொருத்தமற்றது.
அடுத்த பொதுத் தேர்தலிலாவது மக்களின் வாக்கினால் பாராளுமன்றத்துக்கு வந்து காட்டுமாறு தேசியப்பட்டியல் உறுப்பினர் டிலான் பெரேராவுக்கு தான் சவால் விடுப்பதாகவும், அதன்பின்னர் இவ்வாறான கருத்துக்களைக் கூறினால் மக்களிடம் பெறுமதியாக இருக்கும் எனவும் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க கூறினார்.
அனுராதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது, இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா துமிந்த திஸாநாயக்கவுக்கு வழங்கிய ஒரு அடியே பொதுச் செயலாளர் பதவியிலிருந்து அவரை மாற்றியதாகும் எனக் கூறியிருந்தமை குறித்து ஊடகவியலாளர்கள் வினவியபோதே அமைச்சர் துமிந்த திஸாநாயக்க இவ்வாறு குறிப்பிட்டார்.

