பர்பசுவெல் டிரசரிஸ் நிறுவனத்துடன் இணைந்ததான டப்ளியூ.எம். மெண்டிஸ் நிறுவனத்தினால் பெற்றுக் கொள்ளப்பட்ட 30 இலட்சம் ரூபாவை கேட்கும் பட்சத்தில் அதனை திருப்பிக் கொடுக்க தயார் என இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்தார்.
பொருத்தமான முறையில் பிரதமரோ கட்சியிலுள்ள முக்கியஸ்தர்களோ இந்த வேண்டுகோளை விடுக்க வேண்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
நேற்று அவர் நடாத்திய விஷேட ஊடக சந்திப்பின் போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையில் இராஜாங்க அமைச்சர் இதனைக் கூறினார்.

