அரசாங்கத்துக்கு எதிரான ஊடகங்கள் சுதந்திரமாக விடப்பட்டுள்ளன- மங்கள

297 0

ஊடகச் சுதந்திரம் தொடர்பில் தற்போதைய அரசாங்கம் மிகுந்த அர்பப்ணிப்புடன் செயற்பட்டு வருவதாக ஊடகத் துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

பெரும்பாலான ஊடகங்கள் அரசாங்கத்துக்கு எதிராகவே செயற்படுகின்றன. எதிரணியினருக்கே பெருமளவு முக்கியத்துவம் வழங்குகின்றன.

குறிப்பாக சில ஊடகங்கள் பிரதமருக்கு எதிராக, நேரடியாகவே செயற்படுவதைக் காணமுடிகிறது. அவ்வாறிருந்தும் அரசாங்கம் அவற்றுக்குத் எவ்வித தடையையும் ஏற்படுத்துவதில்லையெனவும் அமைச்சர் நேற்று (08) பாராளுமன்றத்தில் உரையாற்றுகையில் மேலும் கூறியுள்ளார்.

Leave a comment