இலங்கையிடம் பாடம் கற்க வேண்டும்

347 0

labtechமலேரிய அற்ற தேசமாக இலங்கை உருவாகியுள்ளமையானது, ஏனைய நாடுகளுக்கு மிகப்பெரியஉதாரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் உலக மலேரிய வேலைத்திட்டத்தின் பணிப்பாளர் பெட்ரோ எல் அலோன்சோ இதனைத் தெரிவித்துள்ளார்.

1940களில் இலங்கையில் பல மில்லியன் கணக்கான மக்கள் மலேரியாவினால் பாதிக்கப்பட்டனர்.

ஆனால் 1963ஆம் ஆண்டு 17 மலேரிய நோயாளர்களே அடையாளம் காணப்பட்டனர்.

இதன்படி 50 வருடங்களுக்கு முன்னரே இலங்கை இந்த விடயத்தில் வெற்றி கண்டுவிட்டது.

அதன்பின்னர் இந்த நிலைமையை தக்க வைத்துக் கொண்டு தற்போது மலேரிய அற்ற தேசமாக உருவாகி இருக்கிறது.

இதனை ஏனைய நாடுகள் பாடமாக கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.