நிலுவை பணம் வழங்காமை மாபெரும் அநீதியாகும் – அரவிந்தகுமார்

228 0

மலையக தோட்ட தொழிலாளர்களுக்கு 800 கோடி ரூபாவுக்கு மேல் வழங்கவுள்ள நிலுவைப் பணம் இன்னும் வழங்காது நிலுவையில் உள்ளது. இது தொழிலாளர்களுக்கு இழைக்கின்ற மாபெரும் அநீதி என்று பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்தகுமார் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை கடை, அலுவலக ஊழியர் ஒழுங்குப்படுத்தல் திருத்தச்சட்டமூலம் மற்றும் மகப்பேற்று நன்மைகள் திருத்தச்சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில‍ேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

தொழிற்சங்கவாதி என்ற வகையில் ஊழியர்களின் இன்னல்களை கூற வேண்டும். மலையக மக்கள் தோட்ட தொழிலாளர்களாக உள்ளனர். கூட்டு ஒப்பந்ததின் அடிப்படையில் அவர்களின் சம்பளம் நிர்ணயிக்கப்படுகினற்து. அந்த ஒப்பந்தம் புதுப்பிப்பு இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும். இறுதியாக ஒப்பந்தம் கைச்சாதிடுவதற்கு தாமதம் ஏற்பட்டது. இதனுடன் தொடர்புடையவர்களிடம் அதற்கான காரணத்தை கேட்க வேண்டும்.

ஒரு வருடங்களுக்கு முன்பே கூட்டு ஒப்பந்தம் இறுதியாக புதுப்பிக்கப்பட்டது. அதிலே தோட்ட தொழிலாளர்களுக்கு 3500 ரூபா நிலுவை இருந்தது. இதன்படி மொத்தமாக ஒருவருக்கு 42 ஆயிரம் ரூபா நிலு‍வை கிடைக்கும் என மக்கள் எதிர்பார்ப்புடன் இருந்தனர். ஆனால் இன்னும் கிடைக்கவில்லை.

மலையத்தில் வாழும் 2 இலட்சம் தோட்ட தொழிலாளர்களுக்கு  800 கோடி ரூபாவுக்கு மேல் நிலுவை பணம் வழங்க வேண்டும். அது இன்னும் வழங்கப்படவில்லை. இது பெரும் அநீதியாகும். கூட்டு ஒப்பந்ததுடன் சம்பந்தப்பட்டவர்களிடத்தில் ஒரு ஒப்பந்தம் உள்ளது. அதன்படியே அவர்கள் செயற்படுகின்றனர்.

ஆகவே இந்த நடவடிக்கைக்கு எதிராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விசேட ஆணைக்குழுவை நியமித்து விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

Leave a comment