அரசாங்கம் இல்லை, பாராளுமன்றத்தைக் கலையுங்கள், தேர்தலை நடாத்துங்கள்- மஹிந்த

334 0

நாட்டில் அரசாங்கம் ஒன்று இல்லையென்பது தற்பொழுது தெளிவாக விளங்குவதாகவும், பொதுத் தேர்தல் ஒன்றை நடாத்தி தகுதியான அரசாங்கம் ஒன்றை அமைப்பதே இதற்கான ஒரே வழி எனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

கொழும்பு, விஜேராமவில் உள்ள தனது இல்லத்தில் இன்று (31) மாலை இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.

ஜனாதிபதியின் நேற்றைய உரையில் அரசாங்கத்தின் நிலைமை தெளிவாக விளங்குகின்றது. பிரதமர் ஒரு பக்கமும், ஜனாதிபதி இன்னுமொரு பக்கமும் உள்ள நிலையில் நாட்டைக் கொண்டு செல்ல முடியாது. இதுபோன்ற நிலையில் நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது. இதனால் தேர்தல் ஒன்றை நடாத்தி பொருத்தமானவர்களிடம் அரசாங்கத்தை ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மஹிந்த ராஜபக்ஷ எம்.பி. மேலும் குறிப்பிட்டார்.

Leave a comment