பொது மக்களின் போக்குவரத்துக்காக தற்பொழுது நாட்டில் நடைமுறையிலுள்ள அரைச் சொகுசு (Semi luxury) பஸ் சேவையை இவ்வருடம் டிசம்பர் 31 ஆம் திகதியுடன் நிறுத்திவிடுவதற்கு தீர்மானித்துள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது.
பயணிகளின் முறைப்பாடுகளைக் கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

