100 நாளில் மடத்தனமான விடயங்கள் பல இருந்தன- வசந்த சேனாநாயக்க

477 0

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியேற்றதன் பின்னர் அமைக்கப்பட்ட அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட 100 நாள் வேலைத்திட்டத்தில் மடத்தனமான பல்வேறு விடயங்கள் அமைந்திருந்தது என்பது மறைப்பதற்கான விடயம் அல்லவென ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினரும் ஐக்கிய தேசியக் கட்சியின் இராஜாங்க அமைச்சருமான வசந்த சேனாநாயக்க தெரிவித்தார்.

இன்று நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டம் நிறைவடைந்த பின்னர், 100 நாள் வேலைத்திட்டம் தொடர்பில் ஜனாதிபதி தெரிவித்திருந்த கருத்துக்கள் குறித்து ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையில் அவர் இதனைக் கூறினார்.

Leave a comment